சென்னை மாநகராட்சி சார்பில் திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது போலீசில் புகார்!

சென்னை மாநகராட்சி சார்பில் திமுக எம்.எல்.ஏ சங்கர் மீது போலீசில் புகார்!

Update: 2022-01-30 12:47 GMT

சென்னையில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி திருவொற்றியூர் நடராஜன் கார்டன் தெருவில் நேற்று முன்தினம் அதிகாலையில் சாலைப் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது அங்கு வந்த திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை பணியை தடுத்து நிறுத்தியதாகவும், பிரச்சினையை தீர்க்க முயன்ற மாநகராட்சி உதவி என்ஜினீயரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. சங்கர் வகித்து வந்த கட்சி பதவியை பறித்து அக்கட்சியின் தலைமை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், மாநகராட்சி ஊழியரை தாக்கியது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News