Do or Die அல்ல… Do and Die – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரண மாஸ்!!
Do or Die அல்ல… Do and Die – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரண மாஸ்!!
அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Do or Die என்ற பழமொழியை Do and Die என்று எடுத்துக் கொள்வேன் என்று பேசிய அனைவரின் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என கூறினார்.
நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன், செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும் என்று நினைப்பவன் என்று கூறினார். அதற்கு ஒரு அடுக்கு மொழியையும அவர் மேற்கோள் காட்டினார்.
Do or Die என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. செய் அல்லது செத்துமடி. ஆனால் அதைக் கூட வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்து சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னைப் பொறுத்தவரை Do and Die என்றுதான் சொல்வேன்.
அதாவது செய்து முடித்துவிட்டுதான் சாக வேண்டும் என்ற உணர்வோடு நான் என்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்ட முதல்வர் அரசு ஊழியர்களுக்கு கருணைக் கொடையை வழங்கியது, வாரிசுதாரர்களுக்கு பணி நியமனங்களை வழங்கியது, ஈட்டிய விடுப்புக்கு பணம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது, வீடு கட்ட கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றை வழங்கியதும் தி.மு.க. அரசு தான் என்று கூறினார்.
newstm.in