மார்ச் 31ம் தேதிக்குள் இதை செய்யுங்கள்.. இல்லாவிட்டால் ரூ.10,000 அபராதம்..!

மார்ச் 31ம் தேதிக்குள் இதை செய்யுங்கள்.. இல்லாவிட்டால் ரூ.10,000 அபராதம்..!

Update: 2022-01-15 11:34 GMT

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பலமுறை ஆதார் மற்றும் பான் இணைப்புக்காக கெடு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முறை, நிர்ணயிக்கப்பட்டுள்ள கெடு தேதிக்குள் பான் கார்டு பயன்படுத்தி வரும் பயனர்கள் அதனை இணைக்கத் தவறினால் அவர்களது பான் கார்டு முடக்கப்படும். அப்படி முடக்கப்படும் பான் கார்டை பயன்படுத்தினால், வருமானவரித்துறைக்கு ரூ.10000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

எனவே, இதுவரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த லிங்கை https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar பயன்படுத்தி அதனை இணைக்கலாம்.

அதே போல, ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்தவர்கள் அதனை பின்வரும் முறையின் கீழ் சரி பார்த்துக் கொள்ளலாம். www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற லிங்கை அணுக வேண்டும். 

அதில் பயனர்கள் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை என்டர் செய்ய வேண்டும்.  அதில் வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என உள்ள லிங்கை கிளிக் செய்து இணைப்பு விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

Similar News