இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இதை செய்யக்கூடது.. ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை..!
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இதை செய்யக்கூடது.. ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை..!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கூட்டணி பங்கீடு குறித்தும் அனைத்து கட்சியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகாரட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
“முகக் கவசம் அணியாமல் வேட்பாளர்கள் மற்றும் கட்சி சார்ந்த நபர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் வேட்பாளர்கள் குழுவாக பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லை. 100 நபர்களுக்கு மேல் உள் அரங்க கூட்டத்தில் திரண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். 45 பறக்கும் படைகள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.