திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒரு நாள் காணிக்கை எவ்வளவு தெரியுமா..?

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒரு நாள் காணிக்கை எவ்வளவு தெரியுமா..?

Update: 2021-08-07 17:25 GMT

 

கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் (5ம் தேதி) 20 ஆயிரத்து 575 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில், 9 ஆயிரத்து 710 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் மட்டும் உண்டியல் வருமானமாக 2 கோடியே 58 லட்சம் ரூபாய் கிடைத்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, பத்மாவதி விருந்தினர் மாளிகையில், கவுஸ்துபாம், எம்.பி.சி., சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் அறைகள் எளிதில் கிடைக்கின்றன. இதனை, பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News