மல்லிகை பூ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

மல்லிகை பூ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Update: 2021-12-05 09:37 GMT

தொடர் கனமழை மற்றும் பூக்களின் தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழை காரணமாக காய்கறி, பூ, பழங்கள் என அனைத்தின் விலையும் எகிறிவிட்டன. அதிலும் கடந்த இரண்டு நாட்களாக மதுரையில் கனமழை பெய்துவருவதால் மல்லிகை பூ விலை விண்ணை தொட்டுவிட்டது.

கடந்த வாரம் கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது,

செண்டு பூ  150 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 250 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 150 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் பூவின் வரத்து முற்றிலும் இல்லாத நிலை உள்ளது.

newstm.in

Similar News