வரும் 1ம் தேதி முதல் ஏடிஎம் கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

வரும் 1ம் தேதி முதல் ஏடிஎம் கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

Update: 2021-07-28 16:55 GMT

ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் வரும் 1ம் தேதி முதல் உயருகிறது.

ஏடிஎம் இயந்திரத்தில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம். ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் கடந்த 2014ல் திருத்தி அமைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது ரிசர்வ் வங்கி மீண்டும் திருத்தி அமைத்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம்; அதற்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்குமான கட்டணம் 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணப் பரிவர்த்தனை அல்லாத மற்ற சேவைக்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மற்ற வங்கிகளின் ஏடிஎம் இயந்திரத்தில் மாதத்திற்கு மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.

அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Tags:    

Similar News