சென்னையில் எங்கெல்லாம் எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

சென்னையில் எங்கெல்லாம் எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

Update: 2021-12-31 10:16 GMT

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல்  கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் நேற்று நண்பகல் முதல் கனமழை பெய்தது . பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை 8  மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது 

கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும், வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது , நுங்கம்பாக்கம் 20.5 செ.மீ ,எம் ஜி ஆர் நகர் 19.7 செ.மீஅம்பத்தூர் 19.6 செ.மீ,  தண்டையார்பேட்டை 19 செ .மீ ,  அயினாவரம் 17.7 செ.மீ ,  பெரம்பூர் 15.5 செ.மீ , ஆலந்தூர் 15.4 செ.மீ , சோழிங்கநல்லூர் 12.4 செ.மீ மழை  பதிவாகியுள்ளது.  அதிகபட்சமாக மெரினாவில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

newstm.in

Similar News