வங்கி கணக்கில் ஒரு பைசா கூட இல்லாமல் கடன் பெறலாம்- எப்படி தெரியுமா..?

வங்கி கணக்கில் ஒரு பைசா கூட இல்லாமல் கடன் பெறலாம்- எப்படி தெரியுமா..?

Update: 2021-08-19 13:25 GMT

நிதி அவசர காலங்களில் தனிநபர்கள் ஓவர் டிராஃப்ட் வசதியை பயன்படுத்தி முன்கூட்டியே பணம் எடுக்கும் தேவையை இந்தியன் வங்கிகள் வழங்குகின்றன.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கிகள் உள்ளிட்டவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியை வழங்குகின்றன. இந்த சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் நெருக்கடி காலங்களில் மாதச் சம்பளத்தை விட மூன்று மடங்கு முன்பணம் பெறலாம். ஒவ்வொரு வங்கிக்கும் வெவ்வேறு வரம்புகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுடைய நிதி விவரத்தை பொறுத்து இந்த வசதியை பயன்படுத்தலாம்.

மாத சம்பளம் பெறக்கூடிய வாடிக்கையாளர்கள் ஓவர் டிராஃப்ட் வசதி தொடர்பான தகவல்களை, தாங்கள் சார்ந்திருக்கும் வங்கிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  இந்த சேவை அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தாது.

சேவையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சற்று சிக்கலானவையாக உள்ளன. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே தற்போது தனிநபர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதிகளை வழங்குகின்றன. மேலும், வங்கியில் சம்பள வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கும் இந்த சேவை பொருந்தும்.

ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் எடுக்கப்படும் முன்பணங்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வங்கி ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட பணத்திற்கு முன்கூட்டியே 1% முதல் 3% வரை வட்டி விகிதங்கள் மாறுபடுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News