ATM-ல் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் - எப்படி தெரியுமா?
ATM-ல் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் - எப்படி தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI). இந்த வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ATM-களில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தாலும், இந்த வசதி தேர்ந்தெடுக்கப்பட்ட SBI ATM-களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை மேலும் விரிவாக்கும் வகையில் SBIயில் கணக்கு வைத்திருப்பவர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் SBI Yono செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பணப்பரிவர்த்தனைக்கு 'YONO cash option-க்கு' செல்லவும்.
ATMக்குச் சென்று ATMல் இருந்து எடுக்க விரும்பும் தொகையை டைப் செய்யவும். SBIயில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ மொபைலுக்கு YONO ரொக்க பரிவர்த்தனை எண் அனுப்பப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி அட்டை இல்லாத பரிவர்த்தனை மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த PINஐ 4 மணி நேரத்திற்குள் உபயோகப்படுத்தி விடவேண்டும்.பரிவர்த்தனையின் முழுமையான அங்கீகாரம் மற்றும் பணத்தை சேகரித்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் ATM-களில் நடைபெறும் மோசடிகளையும் டெபிட் கார்டுகளின் குறைவையும் குறைக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ₹ 10,000 வரை எடுத்துக் கொள்ளலாம். சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ATM-ல் பரிவர்த்தனை தோல்வியுற்றால் உடனடியாக வங்கி கிளைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். 7 வேலை நாட்களுக்குள் இந்த தொகை கணக்கில் வரவு வைக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.