கிறிஸ்துமஸ் பண்டிகை முதன் முதலில் எந்த ஆண்டில் கொண்டாடினார்கள் தெரியுமா ?
கிறிஸ்துமஸ் பண்டிகை முதன் முதலில் எந்த ஆண்டில் கொண்டாடினார்கள் தெரியுமா ?
கிறிஸ்துமஸ் என்ற பண்டிகை, முதன் முதலில் ரோமாபுரியில் கி.பி 336ஆம் ஆண்டில் தான் கொண்டாட துவங்கியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன் கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாக அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 85 சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் கிறிஸ்து பிறப்பை மிக விஷேசமாக கொண்டாடுகின்றனர். முதன் முதலாக கிறிஸ்துமஸை விழாவாக கொண்டாடிய நாடு இங்கிலாந்து தான் என வரலாறுகள் கூறுகின்றன.
எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் துவங்கினர். இதை தொடர்ந்து உலக நாடுகளில் யேசு பிறப்பை 14ம் நூற்றாண்டில்தான் கொண்டாடத்துவங்கினர்
யேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா? என்ற கேள்வி இன்று வரை பல ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உள்ளது. அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுபவர்கள் எவருமில்லை. பைபிளிலும் எந்த இடத்திலும் யேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. எனினும் " நடுங்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாகவிருந்த ஆடுமாடு அடைக்கும் கொட்டிலில் தங்கியதாக கூறப்படுகிறது. இந்த வேதவசனங்களை ஆராய்ந்து நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தேவாலயங்கள் ஒன்றுகூடி யேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக ஜனவரி 6ஆம் தேதி கொண்டாட முடிவு செய்து அறிவித்தாக ஜூலியன் நாட்காட்டி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிறகு, கிரகோரியன் நாட்காட்டிப்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் அறிவிக்கின்றது. இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் ஆவார்.
இந்த கிறிஸ்துமஸ் விழா மெல்லமெல்ல கிறிஸ்தவ சமுதாயம் வசிக்கின்ற பகுதிகளில் உலகெங்கும் பரவியது. 432ல் எகிப்திற்கும் அங்கிருந்து இங்கிலாந்திற்கு 6ம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாவது நூற்றாண்டின் இறுதியில் ஸ்காண்டினேவியா தீபகற்பம் வரையிலும் பரவியது.
19ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் இருந்தே அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் என்றால் இப்படித்தான் என்ற பாரம்பரியத்தை உருவாக்கிவிட்டார்கள். கிறிஸ்மஸ் மரம் அலங்கரித்தல், வாழ்த்தட்டைகள் அனுப்புதல், பரிசுகள் கொடுத்தல், கிறிஸ்மஸ் தாத்தா (சாண்ட்ட கிளாஸ் ) என்று பல பரிமாணங்களை ஏற்படுத்தி தனி கலாச்சார முத்திரையை பதித்துக்கொண்டனர். அதுவே இன்றளவும் தொடர்கின்றது.