அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- எவ்வளவு என முழு விவரம் தெரியுமா? !!

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- எவ்வளவு என முழு விவரம் தெரியுமா? !!

Update: 2021-12-25 08:00 GMT

நீண்ட காலமாகவே சம்பள உயர்வு கோரிக்கை விடுத்து அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்குகம் விதமாக சமீபத்தில்தான் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், இரட்டை மகிழ்ச்சி தரும் விதமாக, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் உயரப் போவதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 2022 ஜனவரியில் மேலும் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது 34 சதவீத அகவிலைப்படி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சரி எவ்வளவு உயரும் என பார்ப்போம்?

அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.18,000 என வைத்துக் கொண்டால் 34 சதவீத அகவிலைப்படியில் ரூ.6,120 கூடுதலாகக் கிடைக்கும். அதாவது அவர்களது வருடாந்திர சம்பளம் ரூ.6,480 அதிகரிக்கும்.

அடிப்படை சம்பளம் = ரூ.18,000

31 சதவீத அகவிலைப்படி = ரூ.5,580 (மாதம்)

34 சதவீத அகவிலைப்படி = ரூ.6,120 (மாதம்)

வித்தியாசம் = ரூ.61,20 - ரூ.5,580 = ரூ.540

வருடாந்திர சம்பள உயர்வு = 540 x 12 = ரூ.6,480

அதிகபட்ச சம்பளம்!

அடிப்படை சம்பளம் = ரூ.56,900

31 சதவீத அகவிலைப்படி = ரூ.17,639 (மாதம்)

34 சதவீத அகவிலைப்படி = ரூ.19,346 (மாதம்)

வித்தியாசம் = ரூ.19,346 - ரூ.17,639 = ரூ.1,707

வருடாந்திர சம்பள உயர்வு = 1,707 x 12 = ரூ.20,484


newstm.in

Similar News