பி.எம்.டபுள்யூ பைக்கில் சிக்கிம் டூர் அடிக்கும் அஜித்- என்ன காரணம் தெரியுமா..?
பி.எம்.டபுள்யூ பைக்கில் சிக்கிம் டூர் அடிக்கும் அஜித்- என்ன காரணம் தெரியுமா..?
நடிகர் அஜித் தனக்கு மிகவும் பிடித்த பிஎம்டபுள்யூ சூப்பர்பவர் பைக்கில் வடகிழக்கு மாநிலங்களில் டூர் செய்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துக்கு பைக் ரைடிங்க் செய்வது, கார் டிரைவிங் செய்வது பிடித்தமான பொழுதுப்போக்கு ஆகும். அதனால் அவரிடம் மிகவும் அசத்தலான ஆற்றல்மிக்க வாகனங்கள் பல உள்ளன.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார் நடிகர் அஜித். சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் அவருடைய காட்சிகள் முடிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் தன்னுடைய விருப்பமான பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள்நாட்டிலேயே அவர் டூரிங் செய்து வருகிறார். வடக்கிழக்கு மாநிலங்களில் அவர் தனியாக சுற்றுலாவுக்கு சென்றுள்ளதாகவும், பைக்கில் சென்று பைக்கிலே சென்னை திரும்ப அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் முதல் பாடல் அடுத்த மாதம் வெளியாகிறது. அதை தொடர்ந்து படத்தின் டிரைலரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.