தனியாக ஓ.டி.டி தளம் தொடங்கும் நடிகை நமீதா- என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
தனியாக ஓ.டி.டி தளம் தொடங்கும் நடிகை நமீதா- என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நமீதா புதியதாக ஓ.டி.டி தளம் தொடங்கியுள்ளது. இதை தொடங்கியதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் நடித்தாலும், சரத்குமாருடன் அவர் நடித்த ‘ஏய்’ திரைப்படம் நமீதாவுக்கு பெரிய புகழை பெற்று தந்தது.
அந்த படத்தில் இடம்பெற்ற ‘அர்ஜுனா... அர்ஜுனா...” என்கிற பாடல் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியது. குஜராத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கொஞ்சமாக கொஞ்சும் தமிழில் இவர் பேசும் வீடியோக்கள் சமூகவலைதளங்கள் டிரெண்டிங் அடித்தது.
தற்போது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நடிகை நமீதா, பாஜக கட்சியில் இணைந்து பரபரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் ‘நமீதா தியேட்டர்’ என்கிற பெயரில் புதியதாக ஓ.டி.டி தளம் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஓடிடி தளம் தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளத்தில் படங்களை திரையிடலாம் எனவும் நமீதா தெரிவித்துள்ளார். நமீதா தியேட்டர் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.