த்ரிஷயம் 2 ரீமேக்கில் பூர்ணா எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா...?

த்ரிஷயம் 2 ரீமேக்கில் பூர்ணா எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா...?

Update: 2021-03-14 22:39 GMT

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள த்ரிஷயம்- 2வின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோகன்லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் அமேசான் பிரைம் ஒ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியான படம் ‘த்ரிஷயம் 2- தி ரிசம்ஷன்’. இது 2013-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷயம்’ படத்தின் தொடர் பாகமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதன்மூலம் இந்தியாவில் தயாராகும் ஃப்ரேன்சைஸ் படங்களில் புதிய சாதனை படைத்தார் இயக்குநர் ஜித்து ஜோசப் என ஊடகங்கள் அவரை புகழ்ந்து எழுதின.

முன்னதாக வெளியான த்ரிஷயம் முதல் பாகம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. முதன்முதலாக அந்த படம் தெலுங்கில் தான் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க, மலையாள வெர்ஷனில் ஹீரோயினாக நடித்த மீனா அதே கதாபாத்திரத்தில் இதிலும் நடித்திருந்தார். இந்த படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கி இருந்தார்.  

தற்போது த்ரிஷயம் 2 படத்திற்கான வரவேற்பை கவனித்த நடிகர் வெங்கடேஷ், தெலுங்கில் அந்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கான ஷூட்டிங் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. தெலுங்கு பதிப்பையும் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார். மேலும், முந்தைய தெலுங்கு த்ரிஷயம் படத்தில் நடித்தவர்கள் இந்த புதிய பாகத்திலும் தொடரவுள்ளனர்.

த்ரிஷயம் 2-வில் புதியதாக தாமஸ் பேஸ்டின் மற்றும் வழக்கறிஞர் ரேணுகா என இரண்டு கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். அவற்றில் பிரபல நடிகர்கள் முரளி கோபி மற்றும் அறிமுக நடிகை சாந்தி ப்ரியா நடித்திருந்தனர். அதன்படி தெலுங்கு பதிப்பில் முரளி கோபி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கை வைக்க படக்குழு மோகன்லால் மற்றும் ராணா டகுபாதி இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருவரில் ஒருவர் நிச்சயம் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல வழக்கறிஞர் ரேணுகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை பூர்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இவர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News