புதைக்கப்பட்ட மம்மிகளின் முகங்கள் எப்படி இருக்கும் தெரியுமா..?
புதைக்கப்பட்ட மம்மிகளின் முகங்கள் எப்படி இருக்கும் தெரியுமா..?
மண்ணில் தோண்டி எடுக்கப்பட்ட மம்மிக்களின் முகங்கள் உண்மையாகவே எப்படி இருக்கும் என்பதை டி.என்.ஏ கொண்டு ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
எகிப்து நாட்டில் கெய்ரோ நகரத்தில் கி.மு 1380 முதல் கி.பி. 425 வரை புதைக்கப்பட்ட மம்மிக்களை மட்டும் இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். மரபணு பகுப்பாய்வு மூலம் ஒரு நபரின் உடல் தோற்றத்தின் முக அம்சங்களையும் பிற அம்சங்களையும் கண்டறியப்படலாம்.
மேலும் ஸ்னாப்சேட் என்கிற பினோடைப் முறையின் மூலம் ஒரு மனிதனின் தோல் நிறம், நிறமி மற்றும் வம்சாவளியை கணிக்கலாம். இதை வைத்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மம்மிகள் பழுப்பு நிற தோல், அடர் கருப்பு நிற கருவிழி மற்றும் கேசங்களை கொண்டிருந்தனர் என்கிறார்கள்.
இதுதவிர 3டி தொழில்நுட்பம் கொண்டு மம்மிக்களின் முக அமைப்புகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். இவை தற்போது பொதுமக்களின் பார்வைக்காக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.