அடுத்தடுத்து சாதனை! ‘வாத்தி கம்மிங் பாடலின் லேட்டஸ்ட் சாதனை இது தான்!
அடுத்தடுத்து சாதனை! ‘வாத்தி கம்மிங் பாடலின் லேட்டஸ்ட் சாதனை இது தான்!
விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியானது ‘மாஸ்டர்’ திரைப்படம். இதில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. இப்படம் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.
இதனிடையே இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக 'குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் பட்டிதொட்டி முழுவதும் பிரபலமானது.
பிரபலங்களும் ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் அந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். மாஸ்டர் படம் வெளியான பிறகு அதன் வீடியோ வெளியானது. இந்நிலையில் தற்போது யூ-ட்யூபில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
newstm.in