ரஜினியின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’டிவியில் எப்ப ஒளிபரப்பாகும் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற டிஸ்கவரி சேனலில் வரும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி, வருகிற மார்ச் 23ந்தேதி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2020-02-27 22:32 GMT

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற டிஸ்கவரி சேனலில் வரும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி, வருகிற மார்ச் 23ந்தேதி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

டிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவில் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது.இந்நிலையில், டிவியில் எப்போது வரும் என ரஜினி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் இந்நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி ஒளிபரப்பப்படுவதாக டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது.

Full View

newstm.in

Tags:    

Similar News