வலிமை படத்தின் ’நாங்க வேற மாரி பாடலுக்கு ட்ரம்ஸ் வாசித்தது யார் தெரியுமா? யுவன் புதிய தகவல் !!
வலிமை படத்தின் ’நாங்க வேற மாரி பாடலுக்கு ட்ரம்ஸ் வாசித்தது யார் தெரியுமா? யுவன் புதிய தகவல் !!
வலிமை படத்தின் 'நாங்க வேற மாரி’ உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார் .
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு நாங்க வேற மாரி பாடல் வெளியானது. இப்பாடல் வெளியான ஒரு நாளிற்குள் யூடியூபில் 1 மில்லியன் லைக்குகளைக் குவித்துள்ளதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.
10 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்திருந்தது. ’என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பிடித்த ‘அதாரு அதாரு’ பாடல் ஹிட்டிற்குப்பிறகு, விக்னேஷ் சிவன் அஜித்திற்கு இரண்டாவது முறையாக ‘நாங்க வேற மாரி’ பாடலை எழுதியிருக்கிறார். இந்த நிலையில், இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், நாங்க வேற மாரி பாடலை எல்லோரும் ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தலக்காகவே பண்ண மாஸ்ஸான ஒரு பாட்டு இது. படத்தில் மெயினாக ஒரு மாஸ்ஸான பாடல் ஒண்ணு அஜித் சாருக்கு பண்ணனும் என்று எச்.வினோத் கேட்டிருந்தார். தல-க்கு என்ன தேவையோ அதனை மனதில் வைத்தும் தியேட்டர் மூமெண்ட் எல்லாவற்றையும் நினைத்தே பாடலை உருவாக்கினோம். இப்பாடலுக்கு, ஒரிசாவில் இருந்து வந்து ட்ரம்ஸ் வாசித்தார்கள் என்று பகிர்ந்திருக்கிறார்.
newstm.in