இத்தனை வயசுக்கு பிறகு கல்யாணம் கேட்குதா..?: தந்தையை அடித்துக் கொன்ற மகன்..!

இத்தனை வயசுக்கு பிறகு கல்யாணம் கேட்குதா..?: தந்தையை அடித்துக் கொன்ற மகன்..!

Update: 2022-01-12 13:39 GMT

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ராஜ்குருநகர் பகுதியில் பேக்கரி வைத்து நடத்துபவர் சேகர். இவரது தந்தை சங்கர் (80). சேகரின் தாய் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தந்தை சங்கர் சேகரின் வீட்டில் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் சங்கர், சில மாதங்களாக செய்தித்தாள்களில் வெளியாகும் திருமணத் தகவல்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதாகவும், சில தகவல் மையங்களில் தனது பெயரை பதிவு செய்திருப்பதாவும் சங்கரின் மருமகள் சேகரிடம் கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, சேகர் மதிய உணவிற்காக தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது வீட்டில் அவரது தந்தை மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சேகர் அவரிடம், “திருமணத் தகவல் மையத்தில் பெயர் பதிவு செய்துள்ளீர்களா..?” என்று கேட்டுள்ளார்.

அதை அவரது தந்தை மறுத்துள்ளார். அப்போது அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அவர் திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்ததும், அதற்கான கட்டணம் செலுத்தி இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சேகர் அவருடைய தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி செய்துள்ளார். அதன்பின்பு கல் கொண்டு பலமாக தலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் தலையை துண்டிக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் சென்ற சேகர் தன்னுடைய தந்தையை கொலை செய்து விட்டதாகக் கூறி சரணடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார், சேகர் மீது ஐபிசி 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Similar News