200 ரூபாய்க்குள் ரீசார்ஜ் பண்ணணுமா..?: அப்போ, இந்த பிளான்களை யூஸ் பண்ணிக்கோங்க..!
200 ரூபாய்க்குள் ரீசார்ஜ் பண்ணணுமா..?: அப்போ, இந்த பிளான்களை யூஸ் பண்ணிக்கோங்க..!
சமீபத்தில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் பிளான்களின் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தின. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய ப்ரீபெய்ட் பிளான்களின் படி ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரூ.200-க்கும் குறைவான கட்டணத்தில் சில ப்ரீபெய்ட் பிளான்களை வழங்குகின்றன. இந்த பிளான்கள், டேட்டாவுடன் சேர்த்து அன்லிமிட்டட் கால்ஸ்களையும் வழங்குகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ பிளான்கள்:
ரூ.199 பிளான்: இந்த பிளான் 23 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 1.5 GB ஹைஸ்பீட் டேட்டா மற்றும் 100 SMS, ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவற்றுடன் கிடைக்கிறது. இந்த பிளானில் மொத்தம் 34.5 GB டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.179 பிளான்: இந்த பிளான் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸுடன் 24 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதன் மூலம் தினசரி 1GB ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் 100 SMS, ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவற்றை பெறுவார்கள். இந்த பிளானில் மொத்தம் 24 GB டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.149 பிளான்: இந்த பிளான் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸுடன் 20 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 1 GB ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் 100 SMS, ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் அளிக்கப்படுகிறது. இந்த பிளானில் மொத்தம் 20 GB டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.119 பிளான்: இந்த பிளான் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸுடன் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. தினசரி 1.5GB ஹை ஸ்பீட் டேட்டா, ஜியோ ஆப்ஸிற்கான காம்ப்ளிமென்ட்ரி சப்ஸ்கிரிப்ஷன் அளிக்கப்படுகிறது. இந்த பிளானில் மொத்தம் 300 SMS மற்றும் 21 GB டேட்டா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் பிளான்கள்:
ரூ.179 பிளான்: இந்த பிளான் மொத்தம் 2GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 300 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பிளானில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் நன்மைகளில் ஃப்ரீ ஹலோ ட்யூன்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஃப்ரீ வின்க் மியூசிக் ஆகியவை அடங்கும்.
ரூ.155 பிளான்: 24 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் மொத்தம் 1GB டேட்டா, 300 SMS மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் ஆகியவை வழங்கப்படுறது. கூடுதல் நன்மைகளில் ஃப்ரீ ஹலோ ட்யூன்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஃப்ரீ வின்க் மியூசிக் ஆகியவை அடங்கும்.
வோடபோன் ஐடியா பிளான்கள்:
ரூ.199 பிளான்: இந்த பிளான் 18 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 1GB டேட்டா மற்றும் 100 SMS, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. கூடுதல் பலன்களில் Vi மூவிஸ் மற்றும் டிவி-க்கான ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை அடங்கும்.
ரூ.179 பிளான்: இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், மொத்தம் 2GB டேட்டா மற்றும் 300 SMS ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதல் பலன்களில் Vi மூவிஸ் மற்றும் டிவி-க்கான ஃப்ரீ சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை அடங்கும்.