நடுச்சாலையில் டாக்டர் தம்பதி சுட்டுக்கொலை.. பதைபதைப்பை ஏற்படுத்தும் வீடியோ !!
நடுச்சாலையில் டாக்டர் தம்பதி சுட்டுக்கொலை.. பதைபதைப்பை ஏற்படுத்தும் வீடியோ !!
பட்டப்பகலில் டாக்டர் தம்பதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் தம்பதிகள் சுதீப் குப்தா அவரது மனைவி சீமா குப்தா. இவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள பாரத்பூரில் காரில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இரு இளைஞர்கள் அவர்க வழிமறைத்தனர். பைக்கில் இருந்து இறங்கிய ஒருவன் சில நொடிகளில் டாக்டரையும் அவர் மனைவியையும் மிக நெருக்கத்தில் நின்று 5 முறை சுட்டுத் தள்ளினான். இதில் டாகடர் தம்பதிகள் காருக்குள்ளேயே பலியானார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபா தேவி என்ற 25 வயது இளம் பெண்ணையும் அவளது 6 மாத குழந்தையையும் கொலை செய்த வழக்கில் இந்த டாக்டர் தம்பதிகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சி.சி.டி.வி காட்சிகளில் ஒருவர் முகத்தை மறைக்காமலும் ஒருவர் மறைத்துக்கொண்டும் சுட்டுக்கொன்றது தெரியவந்தத. அதன் அடிப்படையில் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அந்த பதைபதைப்பை ஏற்படும் வீடியோ இதோ...
Doctor couple shot dead in Bharatpur district of Rajasthan by unidentified assailants. #crime #Doctor @PoliceRajasthan #Rajasthan @RajCMO @VasundharaBJP @aloketikku pic.twitter.com/NAHDYcnBd4
— ⭐️Sachin Saini⭐️ (@sachinsaini14) May 28, 2021
newstm.in