கொரோனா குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர்! அரசின் அலட்சியதால் மக்கள் பல
கொரோனா குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர்.. சீன அரசின் அலட்சியதால் மக்கள் பலி..!
கொரோனா வைரஸ் பரவுவது குறித்து டிசம்பர் மாதமே எச்சரித்த மருத்துவர் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்த மருத்துவர் லி வென்லியாங் (Li Wenliang). அவர் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வீ சாட் மூலமாக தன் நண்பர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர், தன்னிடம் சிகிச்சை பெறவந்த கடல் உணவுகளை விற்பனை செய்யும் உள்ளூர் மார்க்கெட்டைச் சேர்ந்த 7 பேர் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அதில், நண்பர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் சீன மக்களுக்கு அரசின் கடுமையான தணிக்கை முறைகள் மீது கோபத்தையும், லி வென்லியாங் மீது அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சீன அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. வரும் காலங்களில் புதுவிதமான வைரஸ், நோய்கள் குறித்து முன்பே தெரிவிக்கும் மருத்துவர்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் என சீன அரசு கூறியுள்ளது.
newstm.in