இங்கிலாந்து தோல்விக்கு கறுப்பின வீரர்கள் மீது இனவெறிப் பேச்சு- உலகக் கோப்பை நடத்தத் தகுதியிருக்கா? எழும் கண்டன குரல்கள்!

இங்கிலாந்து தோல்விக்கு கறுப்பின வீரர்கள் மீது இனவெறிப் பேச்சு- உலகக் கோப்பை நடத்தத் தகுதியிருக்கா? எழும் கண்டன குரல்கள்!

Update: 2021-07-12 20:11 GMT

பெறும் எதிர்பார்ப்புடன் நேற்று யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. லண்டனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியிடம் அடைந்த தோல்வி அடைந்தது. இதனால் இத்தாலி நாட்டு ரசிகர்கள், வீரர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் இங்கிலாந்து ரசிகர்கள் சொந்த நாட்டு அணியில் உள்ள கறுப்பின ரசிகர்கள் மீதே இனவெறியுடன் பேசியது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெனால்டி சூட் முறையில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கணக்கில் இத்தாலி அணி வென்றது. இதில் இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடித்தனர். ஆனால், மற்ற 3 வீரர்களான மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகியோர் கோல் அடிக்க தவறினர். இதில் இங்கிலாந்து தரப்பில் கோல் அடிக்கத் தவறிய 3 வீரர்களுமே கறுப்பின வீரர்கள்.

இங்கிலாந்து அணியின் தோல்விக்கு இந்த 3 கறுப்பின வீரர்களும் காரணமாகிவிட்டதாகக் கூறி சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் நிறவெறி, இனவெறியின் உச்சத்துக்குச் சென்று விமர்சித்தனர். இந்த நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக அளவில் கால்பந்து ரசிகர்களும், நிர்வாகிகளும் இந்த நிறவெறி விமர்சனங்களால் மிகுந்த வேதனை அடைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கண்டனத்தில், “எங்கள் காரில், நான் வீட்டுக்குச் செல்லும்போது நான் பார்த்த காட்சிகள் மோசமானவை. இதுதான் 2021-ம் ஆண்டில் நமது நடத்தையா? வீரர்களை அவமானப்படுத்துவது யாருக்கு மகிழ்ச்சியைத் தரும்? உண்மையில் 2030ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த இங்கிலாந்துக்குத் தகுதி இருக்கிறதா?” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்டர் பதிவில், நமது ஹீரோக்கள் புகழ்வதற்குத் தகுதியானவர்கள். நிறவெறியுடன் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. சமூக வலைதளத்தில் நிறவெறியுடன் கருத்துகளைப் பதிவிட்டவர்கள் கண்டிப்பாக தங்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், கால்பந்து அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.  


newstm.in

Tags:    

Similar News