இனிமேல் அதெல்லாம் வேண்டாம்: இயக்குநர்களிடம் ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன ரஜினி..!
இனிமேல் அதெல்லாம் வேண்டாம்: இயக்குநர்களிடம் ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன ரஜினி..!
இனி அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களில் சில விஷயங்கள் இடம்பெறக்கூடாது என கண்டிப்புடன் சொல்லி வருகிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இதனால் அவருக்கு கதை சொல்ல வருபவர்கள் சற்று குழப்பம் அடைந்துவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் பிரவேசத்திற்கு முழுக்குப்போட்டு முடித்துவிட்ட ரஜினிகாந்த், தற்போது சினிமாவில் மீண்டும் தீவிரமாக இயங்க முடிவு செய்துள்ளாராம். அதற்காக அவர் டிக் செய்துள்ளவர்கள் அனைவரும் இளம் இயக்குநர்கள் தான். இனிமேல் சீனியர் இயக்குநர்களின் படங்களில் கதையை கேட்டு நடிப்பது என அவர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மீண்டும் அண்ணாத்த படத்தில் நடிக்க ஆயத்தமாகி வரும் ரஜினிகாந்த், அடுத்தடுத்து கதைகளை கேட்டு வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியோரில் ஒருவருடைய இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் இளம் நடிகைகளை கதாநாயகியாக நடிக்கவைக்க கூடாது, தன் வயதுக்கு ஏற்றவாறு தான் கதாபாத்திரம் இருக்க வேண்டும், டூயட் பாடல்கள், குத்து பாடல்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம் ரஜினிகாந்த்.
அவரை ஒரு கடவுள் போல பார்த்து பழகிவிட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த புது கண்டிஷன்கள் எடுபடுமா என்பது கேள்விகுறி தான். இப்படிதான் கதை எழுத வேண்டும் என்றால் அதற்கேற்ற நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ரஜினிஸம் போயிவிட்டால் கோலிவிட்டில் கமர்ஷியல் இயக்குநர்கள் பாடு திண்டாட்டம் தான் என்பது பலருடைய கவலையாக உள்ளது.