மாணவர்களின் வீடுகளுக்கே புத்தகங்கள் டோர் டெலிவரி! புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்!

மாணவர்களின் வீடுகளுக்கே புத்தகங்கள் டோர் டெலிவரி! புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்!;

Update: 2021-05-31 08:30 GMT

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டு முழுவதுமே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்று வந்த நிலையில், கொரோனா 2வது தொற்று பரவலின் காரணமாக தற்போதும் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து சரியான விளக்கம் இல்லை.

இத்தனை நாட்கள் கோடை விடுமுறையில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியால், தற்போது புதிய கல்வியாண்டுக்கான நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

இந்நிலையில், புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி, கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த கல்வியாண்டுக்கான (2021-22) பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த 3.8 கோடி 3.8 கோடி பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்ய பாடநூல் கழகம் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் அவசியம் என்பதால், மாணவர்களுக்கு இந்த வாரத்தில் பாடப்புத்தகங்கள் விநியோகம் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது. 

Tags:    

Similar News