இரட்டை மாஸ்க் கட்டாயம்.. செய்யக்கூடியவை? செய்யக்கூடாதவை என்ன? அரசு விளக்கம்
இரட்டை மாஸ்க் கட்டாயம்.. செய்யக்கூடியவை? செய்யக்கூடாதவை என்ன? அரசு விளக்கம்
துணி மற்றும் அறுவைசிகிச்சை முகக்கவசத்தை பயன்படுத்தி இரட்டை முகக்கவசமாக அணிவதன்முலம் கொரோனா தொற்று ஏற்படுவதை பெருமளவில் தடுக்கலாம் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கோவிட்-19க்கு எதிரான போட்டத்துக்கு மத்தியில், சுகாதார வல்லுநர்கள் இரண்டு முகக்கவசங்களை (Double Mask) பயன்படுத்த ஊக்குவிக்கின்றனர். இது, கொடிய நோய்க்கு எதிராக ஒரு வலுவான தடையை உருவாக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசங்கள் அணியுங்கள் என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் இந்த விழிப்புணர்வில் பங்குகெடுத்து வருகின்றனர்.
டபுள் மாஸ்க் அணிவது எப்படி?
நமக்கு மூச்சுத் திணறல் இல்லாமல் சரியான முறையில் அணிந்தால் மட்டுமே இரட்டை முகக்கவசம் நன்மை பயக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு அறுவை சிகிச்சை முகக்கவாசத்தின் மேல் ஒரு துணி முகக்கவாசத்தை இணைத்தால் மட்டுமே சரியாக உதவும், இது உங்களை கொடிய வைரஸிலிருந்து விலக்கி வைக்கும் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்காது.
டபுள் மாஸ்க் அணிந்து செய்யக்கூடியவை:-
- இரட்டை முகமூடி ஒரு அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் இரட்டை அல்லது மூன்று அடுக்கு துணி முகமூடியைக் கொண்டிருக்க வேண்டும்.
- முகமூடியை மூக்கு பாலத்தில் இறுக்கமாக அழுத்த வேண்டும்.
- சுவாசம் தடுக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- துணி முகமூடியை தவறாமல் கழுவவும்.
டபுள் மாஸ்க் அணிந்து செய்யக்கூடாதவை:-
- ஒரே மாதிரியான இரண்டு முகமூடிகளை இணைக்க வேண்டாம்.
- தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒரே முகமூடியை அணிய வேண்டாம்.
துணியால் ஆன ஒரு முகக்கவசம் மற்றும் அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக்கவசம் ஆகிய இரண்டையும் இணைத்து பயன்படுத்துவது மூலம், மூக்கு மற்றும் வாய் பகுதிகளை முற்றிலுமாக மறைத்து, காற்று கசிவதைத் தடுக்கலாம் என்று அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention (CDC) ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
ஒரு முகக்கவாசத்தை விட, இரட்டை முககைவசம் அதிகபட்சம் 95 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
#Unite2FightCorona
— PIB in KERALA (@PIBTvpm) May 9, 2021
The Dos and Dont's while #DoubleMasking...Take a look👇#PIBKochi @COVIDNewsByMIB @PIB_India @KirenRijiju @BSF_India @CRPF_sector @cpmgkerala @crpfindia @GMSRailway pic.twitter.com/hH8nY9Og38
newstm.in