பாரில் குடிக்கலாம்.. மால் திறப்பு ! ஊரடங்கு தளர்வில் அதிரடி காட்டிய அரியானா !!

பாரில் குடிக்கலாம்.. மால் திறப்பு ! ஊரடங்கு தளர்வில் அதிரடி காட்டிய அரியானா !!

Update: 2021-06-20 19:38 GMT

அரியானா மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2ஆவது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், தொற்று பாதிப்பு அதிகரித்த போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த மாநிலங்கள், தற்போது அதனை தளத்தி வருகின்றன. அதாவது பாதிப்பு குறையத்தொடங்கியதையடுத்து படிப்படியாக ஊரடங்கை தளர்த்த தொடங்கியுள்ளன. அந்தவகையில், அரியானாவிலும் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 


அதாவது ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டப்போதும் கூடுதல் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் உள்பட அனைத்து கடைகளையும் திறக்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News