பெண் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு.. இந்து மகா சபா நிறுவனரின் டிரைவர்கள் கைது
பெண் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு.. இந்து மகா சபா நிறுவனரின் டிரைவர்கள் கைது
அகில இந்திய இந்து மகா சபாவின் மகளிர் அணி மாநிலச் செயலாளராக இருந்த நிரஞ்சனி என்பவர், கோடம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், அகில இந்திய இந்து மகா சபா நிறுவனர் கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் அவரது ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கோடம்பாக்கம் ஸ்ரீயின் கார் டிரைவர்கள் சூளைமேட்டைச் சேர்ந்த ஜெய் பாலாஜி (45), வேளச்சேரியைச் சேர்ந்த நடராஜன் (54) ஆகிய இருவர், நிரஞ்சனி குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து மகா சபாவின் மகளிர் அணியில் மாநிலச் செயலாளராக நிரஞ்சனி, கோடம்பாக்கம் ஸ்ரீ மீது பாலியல் புகார் கூறி அந்த அமைப்பில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் அவதூறு பதிவு செய்து வருவதாக நிரஞ்சனி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in