டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின ! மக்கள் அச்சம் !!

டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின ! மக்கள் அச்சம் !!

Update: 2021-06-20 17:31 GMT

டெல்லியின் சில பகுதிகளில் இன்று நண்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 2.1 அலகுகளாக பதிவாகி இருந்தது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியின் வடமேற்கு பகுதியில் இன்று நண்பகலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சில விநாடிகள் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் வீடுகளில் இருந்து வெளியேறினர். 
 


முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தின் ஷிருயி பகுதியில் இன்று அதிகாலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், அருணாசல பிரதேசத்தின் பான்கெயின் பகுதியிலும் இன்று அதிகாலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தகவலை தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கங்களால் வடமாநில மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் அசாம், மணிப்பூர் மற்றும் மேகாலயா என வடமாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நண்பகலில் டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வடமாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News