மத்திய அரசின் எச்சரிக்கை எதிரொலி.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா..?

மத்திய அரசின் எச்சரிக்கை எதிரொலி.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா..?

Update: 2022-01-29 14:21 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்டமாக பிப்ரவரி 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் தமிழகத்தில் அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;  “தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லி, ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளது” என அவர் கூறினார்.

முன்னதாக, கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வந்த காரணத்தால் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதன்படியே, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

Similar News