பொருளாதார நடவடிக்கை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கே பலன்..!!
பொருளாதார நடவடிக்கை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கே பலன்..!!
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“கடந்த 7 ஆண்டில் பெட்ரோல், டீசல் , கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ. 23 லட்சம் கோடி எங்கே சென்றது ஒரு பக்கம் பண மதிப்பிழப்பையும் மற்றொரு பக்கம் பணமாக்குதல் திட்டத்தையும் அறிவிக்கிறார்கள்.
விவசாயிகள், தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், உள்ளிட்டோர் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014-க்குப் பிறகு பெட்ரோல் 42 சதவீதம், டீசல் 55 சதவீதம் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் பிரதமர் மோடியின் நண்பர்கள் நான்கைந்து நண்பர்களுக்கே பலன்” என்றார்.