பரவசம்! மகர ஜோதியை தரிசித்த ஐயப்ப பக்தர்கள்!!

பரவசம்! மகர ஜோதியை தரிசித்த ஐயப்ப பக்தர்கள்!!

Update: 2022-01-15 06:00 GMT

சபரிமலையில் மகர ஜோதியை ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

சபரிமலையின் பொன்னம்பல மேட்டில் தோற்றும் மகரஜோதியை தரிசித்தால் செல்வங்கள் சேரும், பாவங்கள் நீங்கும் என்பது ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கொரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தபோதும்மகரஜோதி தரிசனத்தற்காக அதிகஅளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்காரணமாக சபரிமலையில் இந்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். சபரி மலை சன்னிதானம் மட்டுமின்றி, பம்பா, நீலிமலை உள்ளிட்டஅனைத்து மலைப்பகுதிகளிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

ஐயப்பனுக்கு தங்கத்தினால் ஆன திரு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பந்தள ராஜகுமாரனாக அரசக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகா தீபாராதனை காட்டப்பட்டதுஅப்போது நேற்று மாலை 6:45 மணிக்கு பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. மகர ஜோதி தரிசனத்தை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.

அது ஐயப்பனின் ஜோதிவடிவம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஜோதியின்போது, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷங்களால் விண்ணை முட்டியது. மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

newstm.in

Similar News