வயலில் இறங்கி நாற்று நட்டார் விவசாயிகளின் முதல்வர் எடப்பாடி!!

திருவாரூர் மாவட்டத்தில் தன்னை வரவேற்ற விவசாயிகளுடன் முதலமைச்சரும் வயலில் இறங்கி நடவு நட்டார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற இடத்தில், விவசாயிகளுடன் உரையாடியபடியே

Update: 2020-03-07 17:30 GMT

 

திருவாரூர் மாவட்டத்தில், தன்னை வரவேற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆர்வமாக சேர்ந்துக் கொண்டு வயலில் இறங்கி நடவு நட்டார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் பெருந்திரளாக விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற இடத்தில், விவசாயிகளுடன் உரையாடிய படியே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்துக் கொண்டு வயலில் இறங்கி சென்றார். அப்போது கோடை சாகுபடிக்கான நடவுப் பணிகள் வயலில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. முதலமைச்சரும் விவசாயிகளுடன் சேர்ந்துக் கொண்டு வயலில் இறங்கி நடவு நட்டார். 

தமிழக முதல்வரின் இந்த எளிமை தமிழகத்தின் தென்பகுதிகளில், விவசாயிகளிடையே பெரும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News