வைப்பு நிதி, கல்விக்கடன், வட்டி! பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு!

வைப்பு நிதி, கல்விக்கடன், வட்டி! பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு!

Update: 2021-05-30 06:14 GMT

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக குழந்தைகள் பலரும் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசுகள் நிவாரணங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசும் நிவாரணம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின் சிறார்களுக்கான பிஎம் கேர்ஸ் நிதித்தொகுப்பில் இருந்து மாதந்தோறும் நிதியதவி வழங்கப்படும் என்றும், 23 வயதானதும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதே போல் குழந்தைகள் வீட்டுக்கு அருகில் உள்ள கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து பயிலலாம் என்றும், தனியார் பள்ளியில் பயில்பவர்களாக இருந்தால் பிஎம் கேர்ஸ் தொகுப்பில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

11 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் மத்திய அரசு நடத்தும் சைனிக், நவோதயா உள்ளிட்ட பள்ளிகளிலும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி வகுப்புகளில் சேருவதற்கான கல்விக் கடன் பெற மத்திய அரசு உதவும் என்றும் அதற்கான வட்டி பிஎம் கேர்-இல் இருந்து செலுத்தப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறமுடியாத குழந்தைகளுக்கு அதற்கு நிகரான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகைகள் காப்பாளர் உதவியுடனோ அல்லது உறவினர்கள் தயவில் வாழும் குழந்தைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News