உஷார்!! இதையெல்லாம் செக் பண்ணுங்க! சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி!
'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்
ரிசார்ட் ஒன்றின் அறையில் எரிவாயு கசிந்து 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியான சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 சுற்றுலா பயணிகள் நேபாள நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு சென்றனர். இவர்கள் அனைவரும் மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் தங்கினர். இதில் ஒரு அறையில் 8 பேரும், மற்றொரு அறையில் 7 பேரும் தங்கியுள்ளனர். தற்போது அங்கு கடும் குளிர் நிலவுவதால் விடுதியின் அறையில் வெதுவெதுப்பாக்க கேஸ் ஹீட்டரை பயன்படுத்தினர்.
எப்போது வெளியூர் பயணங்களில், குறிப்பாக தங்கும் இடங்களில் உள்ள மின் சாதனங்களில் அவை பழுதடைந்திருக்கிறதா, பாதுகாப்பானது தானா? என ஒரு முறைக்கு இரு முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தங்களது தங்குமிடங்களில் தங்க வருபவர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கவர்ந்திழுக்கும் பெரும்பாலான ரிசார்ட்கள் தங்குபவர்களின் பாதுகாப்பை பற்றி உறுதி செய்வதில்லை.
newstm.in