தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. திமுக இன்று ஆலோசனை.. கூட்டணி கட்சிகள் சுறுசுறுப்பு !!
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. திமுக இன்று ஆலோசனை.. கூட்டணி கட்சிகள் சுறுசுறுப்பு !!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்ற (புதன்கிழமை) வெளியிட்டது. பிப்ரவரி 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (ஜனவரி 28) தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையை நேற்றை தொடங்கியதாக கூறப்படுகிறது. திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டதாகவும் சுமூகமாக நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதேபோல் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக திமுக தரப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 27-1-2022 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும்.
அதுபோது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in