மார்ச் 7ல் தேர்தல் தேதி அறிவிப்பு? பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம்!!
மார்ச் 7ல் தேர்தல் தேதி அறிவிப்பு? பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம்!!
தமிழகம், அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உஜ்வாலா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2016ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை மார்ச் 4ஆம் தேர்தல் ஆணையம் வெளியிட்டதாகவும் தற்போது மார்ச் 7ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் பிரதமர் சூசகமாகத் தெரிவித்தார்.
அதாவது, மார்ச் 7ஆம் தேதிக்கு முன்பாக அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு முடிந்த அளவுக்கு அதிகபட்சமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நோபரா - தட்சிணேஸ்வரம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
newstm.in