வாக்குப்பதிவு இயந்திரத்துடன் உறவினர் வீட்டில் உறங்கிய தேர்தல் அலுவலர்..!

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் உறவினர் வீட்டில் உறங்கிய தேர்தல் அலுவலர்..!

Update: 2021-04-06 20:24 GMT

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் அங்கு இன்று நடைபெற்றது.

இந்நிலையில், உலுபீரியா உத்தரில் தேர்தல் துணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த தபான் சர்கார், நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான தனது உறவினரின் வீட்டில் தூங்குவதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்துடன் சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், “இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை முற்றிலும் மீறுவதாகும். அதற்காக துறை அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மற்றும் பெரிய தண்டனை அவருக்கு விதிக்கப்படும். அதிகாரியுடன் இணைக்கப்பட்ட துறை போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

அந்த வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அதனுடன் இணைந்த விவிபாட் இயந்திரம் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News