குலுக்கல் முறையில் தேர்தல் முடிவுகள்!! நீதிமன்றம் அதிரடி!

ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்கு எண்ணிக்கை பெற்றிருப்பின் குலுக்கல் மூலம் வெற்றியாளர் அறியப்படுவது தமிழகத்தில் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை . நடைமுறையை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் .மனுதாரரும் நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பிறகே குலுக்கல் நடத்தப்பட்டது. தற்போது தோல்வியடைந்தவுடன் தொடுத்த வழக்கு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

Update: 2020-02-18 01:51 GMT

தமிழகத்தில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள்  நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம், ஆடையூா் கிராமப் பஞ்சாயத்துத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர்களில் இருவர் தேவதாஸ், கலைவாணி ஒரே எண்ணிக்கையில் 906 வாக்குகளைப் பெற்றிருந்தனா்.

குலுக்கல் முறையில் வெற்றியாளரை நிர்ணயம் செய்ய முடிவு செய்து  குலுக்கல் முறையில்  கலைவாணி வெற்றி பெற்றார். கலைவாணியின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது என மற்றொரு வேட்பாளரான தேவதாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

                                    

அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் பெற்ற தலைவா் பதவி செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருந்தார்.குலுக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமா்வில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்கு எண்ணிக்கை பெற்றிருப்பின் குலுக்கல் மூலம் வெற்றியாளர் அறியப்படுவது தமிழகத்தில் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை. நடைமுறையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுதாரரும் நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பிறகே குலுக்கல் நடத்தப்பட்டது. தற்போது தோல்வியடைந்தவுடன் தொடுத்த வழக்கு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வேறு வழக்குகளில் குலுக்கல் முறையை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறது.

newstm.in

Tags:    

Similar News