சாலையில் வழிவிட்டவர்களுக்கு துதிக்கையை உயர்த்தி நன்றி சொன்ன யானை! வைரல் வீடியோ!!
சாலையில் வழிவிட்டவர்களுக்கு துதிக்கையை உயர்த்தி நன்றி சொன்ன யானை! வைரல் வீடியோ!!
சாலையில் வழிவிட்ட கார் ஓட்டுநர்களுக்கு காட்டு யானை துதிக்கையை உயர்த்தி நன்றி சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானையின் புத்திக்கூர்மை வேறு எந்த விலங்கிற்கும் இருக்காது. அந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் படைத்தவை யானைகள். பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருந்தாலும் அவற்றை போல் அன்பு செலுத்தவும் முடியாது.
அந்த வகையில், ஒடிசாவைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா என்பவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு ஏராளாமான யானைகள் கூட்டம் கடந்து செல்கின்றன. அதனைக் கண்டதும் வாகன ஓட்டிகள் நிற்கின்றனர்.
யானைகள் கூட்டம் கடந்ததும் கடைசியாகச் சென்ற யானை ஒன்று வாகன ஓட்டிகள் இருக்கும் பக்கம் திரும்பி நன்றி தெரிவிக்கும் வகையில் தனது தும்பிக்கையை தூக்கி அசைத்துக் காட்டிவிட்டுச் செல்கிறது.
The thanks of the matriarch at the end👌
— Susanta Nanda IFS (@susantananda3) December 19, 2021
(People proving safe passage surely deserved this) pic.twitter.com/tXGt3bUonM
இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி யானைகள் ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in