போதும் ரூ.300 கோடி வசூல்.. ஓடிடி-யில் வெளியாகிறது ‘புஷ்பா’ !!

போதும் ரூ.300 கோடி வசூல்.. ஓடிடி-யில் வெளியாகிறது ‘புஷ்பா’ !!

Update: 2022-01-04 19:45 GMT

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ தியேட்டர்களில் வெளியாகி வசூலை குவித்த நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது புஷ்பா திரைப்படம். இப்படம் 5 மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் அனைத்து பாடல்கம் ஹிட் அடித்தது. சமந்தா நடனமாடிய பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.  

’புஷ்பா’ வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுக்க ரூ.166 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், இரண்டாவது வாரத்தில் ரூ.222 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது வரை உலகம் முழுவதிற்கும் புஷ்பா திரைப்படத்தின் வசூல் 300 கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ‘புஷ்பா’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் பிரைமில் இப்படம் வரும் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஓடிடி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


newstm.in

Tags:    

Similar News