7 லட்சம் கோடி கடனில் தள்ளிய ஈபிஎஸ்.. இல்லத்தரசிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்- டிடிவி தினகரன்
7 லட்சம் கோடி கடனில் தள்ளிய ஈபிஎஸ்.. இல்லத்தரசிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்- டிடிவி தினகரன்
வரவுள்ள தேர்தலில் ஆளும் கட்சியாக அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பது டிடிவி தினகரனின் அமமுக தான். கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதனால் அமைச்சருக்கு அடிவயிறு கலங்கிபோய் உள்ளது.
எப்படியாவது தொகுதியில் வெற்றிபெற்று தலைமைக்கு காட்டவேண்டும் என காலை முதலே தொடங்கி இரவு வரை அமைச்சர் தொகுதியில் பம்பரமாய் சுழன்று வருகிறார். ஆனால் அத்தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் மாநிலம் முழுவதும் தனது வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரான தேமுதிகவின் ஞானபண்டிதனை ஆதரித்து டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், இயற்கை பேரழிவில் இருந்து கடலூரை பாதுகாக்க அமமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், கொடுமை ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தொழில்துறை அமைச்சரின் தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. தொழில்துறை வளர்ச்சி பெறவில்லை என விமர்சித்தார்.
காங்கிரஸ், பாஜக, எடப்பாடி அணிக்கு தக்க பாடம் புகட்ட அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவும் அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
நிறைவேற்ற முடியாத திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். இது எல்லாம் மக்களை ஏற்றதான். தமிழகம் 7 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியிருக்கும்போது குடும்ப தலைவிகளுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும் எனக் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார், தொடர்ந்து அதிமுக, திமுக மீது கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.
newstm.in