18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்!!
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்!!
இந்தியாவில் கொரோனா பரவலின் 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன்படி முன்களப் பணியாளர்கள், வயதானவர்களை அடுத்து தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1-ம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பப்படும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த 48 மணிநேரத்தில் ‘கோவின்’ என்ற அரசின் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்யும் முறை:
- cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
- பதிவுசெய்ய 'register/sign in yourself'என்பதை க்ளிக் செய்யவும்.
- உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
- உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும்.
- உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி( Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதைவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை, பான் காடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எ.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை
போன்ற மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்.
newstm.in