சின்மயி சொல்றதெல்லாமே பொய்! வைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து மனம் திறந்த மதன் கார்க்கி!

சின்மயி சொல்றதெல்லாமே பொய்! வைரமுத்து மீதான பாலியல் புகார் குறித்து மனம் திறந்த மதன் கார்க்கி!

Update: 2021-05-30 19:17 GMT

தமிழகத்தில் மீ டூ இயக்கத்தை பிரபலப்படுத்தியதில் பாடகி சின்மயி பங்கு பெரியது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், பல அலுவலகங்கள், கர்நாடக இசை சங்கங்கள் என்று சமூகத்தில் பெரிய மனிதர்களின் முகத்திரை கிழிந்து தொங்கியது. ஆனாலும், பாடலாசிரியர் வைரமுத்து மீதான மீ டூ புகார் மட்டும் அரசியல் தலைவர்கள், திரைப்பட சங்கங்களில் பெரிய அளவில் கண்டுக்கொள்ளப்படாமலேயே இருந்து வந்தது.


பாடகி சின்மயியும் தொடர்ந்து வைரமுத்துவிற்கு எதிரான புகாரைப் பதிவு செய்து கொண்டே தான் இருக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கையும் கவிப்பேரரசு வைரமுத்து மீதான மீ டூ புகாரை உறுதிப்படுத்தி அதிர வைத்தனர். ஆனாலும், வைரமுத்து மீதான புகார் பெரிய அளவில் கண்டுக்கொள்ளப்படாமலேயே இருந்தது. தன் தங்கையே வைரமுத்து மீது மீ டூ குறித்து அதிருப்தி தெரிவித்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வைரமுத்துவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருது வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து மீண்டும் வைரமுத்து குறித்து எதிர்ப்பு கிளம்பியது. முன்னதாக வைரமுத்து மீது 15க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு கேரளாவின் உயரிய விருதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  


வைரமுத்துவுக்கு விருது கொடுப்பது பற்றி நடிகை பார்வதியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இத்தனை புகார் தெரிவிக்கும் நீங்கள் ஏன் வைரமுத்துவை உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள் என புகைப்படத்தை வெளியிட்டு சின்மயியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த சின்மயி, கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவருடைய மகன் மதன் கார்க்கி தான் என பதில் பதிவிட்டுள்ளார்.

சின்மயியின் இந்த பதில் குறித்து வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து மதன் கார்க்கி வெளியிட்டுள்ள பதிவில் “இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார்.


ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார். அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டதால் தான் நானும் வாங்கிக் கொடுத்தேன். கவிஞர் வைரமுத்துவின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, அவரது பாதங்களை தொட்டு ஆசி வாங்கினார் என மதன் கார்க்கி முதல் முறையாக சின்மயி புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News