சீமானை கடுமையாக விமர்சித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன்!!
சீமானை கடுமையாக விமர்சித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன்!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டம் ஒன்றில் செருப்பை தூக்கி காட்டியது சர்ச்சையான நிலையில், அந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சங்கி என்று திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். பதிலுக்கு திமுகவினரை சங்கி என்று சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார்.
ஒரு கட்டத்தில் கடுப்பான சீமான், அம்பத்தூரில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று தன் காலில் இருந்த செருப்பை கழட்டி காட்டி, ஆவேசப்பட்டார். இது மேடை நாகரிகம் கிடையாது, அரசியல் நாகரிகமும் கிடையாது என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திமுக - நாம் தமிழர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. திமுகவினர் நாம் தமிழர் மேடையிலேயே ஏறி ரகளை செய்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமான் மேடையில் செருப்பை எடுத்துக் காட்டியது குறித்து கேள்விக்கு, அந்த பொருளுக்கு (செருப்பு) என்ன மரியாதையோ அதே மரியாதைதான் அவருக்கும் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
newstm.in