பரபரப்பு! கூலித்தொழிலாளரி சரமாரியாக வெட்டிக் கொலை!!
பரபரப்பு! கூலித்தொழிலாளரி சரமாரியாக வெட்டிக் கொலை!!
கேரளாவில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் செம்பகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சுதீஷ் என்பவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சுதீஷ் ஆற்றங்கல் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த கும்பல் சுதீஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இதனால், அச்சம் அடைந்த சுதீஷ் போத்தன்கோட் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அந்த கும்பல் சுதீஷின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டது.
இதனையடுத்து அங்கு சென்ற கும்பல் கூலித் தொழிலாளர் சுதீஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. பின்னர், அங்கிருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் போத்தன்கோட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுதீஷை கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுரை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in