பரபரப்பு! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா பெயரில் போஸ்டர்!!
பரபரப்பு! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா பெயரில் போஸ்டர்!!
எம்ஜிஆரின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா பெயரில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவிற்கு அதிமுக கட்சிக் கொடியின் கலரை பயன்படுத்தி நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளார்.
அதில், என் உயிருக்கு நிகரான தலைவரே; இந்த பிறவிக்குப் பிறகு எனக்கு இன்னொரு பிறவி இருக்குமானால் அதில் நீங்கள்தான் என் தலைவர்; தங்கள் நினைவில் வாழும் அன்வர்ராஜா என்று உருக்கமாக வார்த்தைகளை பதிவிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளார்.
எம்ஜிஆர் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி, தலைவா, கட்சியிலிருந்து என்னால் விலகி இருக்க முடியவில்லை ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன் அதில் நான் என்னை மறக்கிறேன் என்று போஸ்டர் அச்சிட்டு ஒட்டியிருந்தது அதிமுக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது எம்ஜிஆர் பிறந்த நாளில் அதிமுக கட்சிக் கொடியின் கலரை பயன்படுத்தி அவரது பெயரை அச்சிட்டு மற்றொரு போஸ்டர் ஒட்டியுள்ளது ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in