கேரளாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு- ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு !!

கேரளாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு- ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு !!

Update: 2021-12-30 10:05 GMT

கேரளாவில் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதும் பின்னர் அதனை கட்டுப்படுத்துமாக உள்ளது. கேரளாவில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு ஓணம் பண்டிகைக்கு தளர்வுகள் தாராளமாக அறிவிக்கப்பட்டன. இதனால் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி தினசரி தொற்று 41 ஆயிரத்தை கடந்து பதிவானது.

தொடர்ந்து வந்த கொண்டாட்டங்களும் கேரளாவின் நோய்த்தொற்று குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைந்தன. இந்த சூழலில் இந்த ஆண்டு கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அதாவது, டிசம்பர் 30 முதல் 2022 ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர கட்டுப்பாடுகள் விதித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கேரளாவில் இன்று(டிச.30) முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் கேரளாவில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது.

இரவு நேர ஊரடங்கின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரைகள், வணிகவளாகங்கள், பார்க்குகள் போன்றவை தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். மக்கள் கூடுவதை தடுக்க ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
 


newstm.in

Tags:    

Similar News