வெடித்து சிதறிய சிலிண்டர்.. துடிதுடித்து உயிரிழந்த தம்பதி.. 4 பிள்ளைகள் !!
வெடித்து சிதறிய சிலிண்டர்.. துடிதுடித்து உயிரிழந்த தம்பதி.. 4 பிள்ளைகள் !!
சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பெற்றோர் மற்றும் 4 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காலையிலேயே மக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் அது சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து என்பது தெரியவந்தது.
டெல்லி வால்மீகி காலனியில் அதிகாலையில் குடும்பத்தினர் உறங்கிக்கொண்டிருந்தப்போது திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டில் இருந்த நான்கு சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தில் உள்ள 6 பேர் உயிரிழந்தனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தவர்கள் கமலேஷ் (37), அவரது மனைவி புதானி (32), அவர்களது இரண்டு மகள்கள், 16 மற்றும் 12, மற்றும் இரண்டு மகன்கள், 6 வயது மற்றும் 3 மாதங்கள் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் சடலங்களை மீட்டு, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். வழக்குப் பதிவு செய்து போலீசார் மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்குப் பரவியதால், வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே இது விபத்தா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in